உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் பாடல்களை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்
உலகளாவிய கொரோனா பொது சுகாதார அவசர நிலையை நீக்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
சிறுமிகளிடம் இருவிரல் கன்னித் தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு – சிதம்பரம் குழந்தை திருமண விவகாரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை விளக்கம்.
என்எல்சிக்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்றிய 5 ஊராட்சி அலுவலக செயலர் இடமாற்றம்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டில் எந்த பேருந்து சேவையும் நிறுத்தப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை திரும்பப்பெற்றார் சரத் பவார். இவர் இம்முடிவை திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 முதன்மை தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் மே 8 முதல் மே 16ம்- தேதி மாலை 5.45 வரை தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
சூடானிலிருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
கேரளா ஸ்டோரி திரைப்படம் தி நகர் ஏ ஜி எஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட பேனர்களை கிழித்துள்ளனர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தி நகர் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
பசங்க பட இயக்குனர் பாண்டியராஜனிடம் நிலம் விற்பனை செய்வதாக ஏமாற்றி 1கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்த குமார் என்பவரை புதுக்கோட்டை குற்ற பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் கன மழை. இதுபோலவே திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் ஜாமீன் கோரிய ஹரி பத்மன் மனு வாபஸ். ஜாமீன் கோரிய வழக்கு ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக முறையீடு. மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தீவிரவாதிகள் உடனான மோதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்.
’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பயங்கரவாதிகளின் கோர முகத்தை கிழித்தெறியும் வகையில் உள்ளது. தீவிரவாதிகளை பற்றி கூறும் படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கிக்காக எதிர்க்கின்றன என கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு நேரடியாக செல்லும் சரக்கு கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனுதாகூர் ( Shantanu thakur) தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் காட்பாடி, லத்தேரி, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.
திராவிட மாடல் காலாவதியானதாக ஆளுநர் புரிதல் இல்லாமல் பேசுகிறார். அண்ணாமலை பாஜகவின் அறிவிக்கப்பட்ட தலைவர், தமிழக ஆளுநர் அறிவிக்கப்படாத தலைவர். இருவரும் ஒரே கருத்தை அரசியலாக பேசுகின்றனர். ஆளுநரின் படபடப்பிற்கு அஞ்சும் இயக்கம் திமுக இல்லை.
அவர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவர்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் திறமையும் முதல்வருக்கு உள்ளது. நாங்கள் எதிர்கொள்வோம் – கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
மத்திய பிரதேசம் லெப்பாவில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை. இரண்டு குழுக்களாக நடைபெற்ற சண்டையில் 6 பேரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ,சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
ஆளுநர் அரசியல் பேசுவது தவறானது. ஆளுநர் அரசியல் செய்துவருகிறார். சனாதன கொள்கை தான் காலவதியான ஒன்று. திராவிட கொள்கை அல்ல. ஆளுநர் பதவிதான் காலவதியாக வேண்டிய ஒன்று என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார்.