உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு. புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா நாளை மறுநாள் காலை பதவி ஏற்கிறார்
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்கள் உண்டியல் காணிக்கை ரொக்கம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 72 ஆயிரம் வந்துள்ளது. தங்கம் 715 கிராம், வெள்ளி 1 கிலோ 610 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 261 ஆகியவை வந்துள்ளன – கோயில் நிர்வாகம்
தமிழ்நாட்டில் மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலம் பணப்பரிமாற்றம் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே நேற்று இரவு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜோதி என்ற நபர் திடீரென குறுக்கில் வந்ததால் கார் மீது இரண்டு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜோதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் கார் ஓட்டுனர் ரகுபதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் நெல்லிக்குப்பம் போலீசார். மது போதையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி அமைச்சர் கார் மீது மோதி கார் சேதமடைந்ததாக புகார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்தார். பொதுத்தேர்வில் அவர் நிகழ்த்திய சாதனையை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஊரியர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் மாணவி நந்தினிக்கு திருவள்ளுர் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்தார். பொதுத்தேர்வில் அவர் நிகழ்த்திய சாதனையை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஊரியர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் மாணவி நந்தினிக்கு திருவள்ளுர் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.
மதுரை கேகே நகர், தல்லாகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. கட்டிடங்களின் சிமெண்ட் கூரைகள் காற்றில் பறந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
“எந்த கட்சிக்கு வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு உங்களுக்கு நலத்திட்டங்களை நாங்கள் வழங்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சியை தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 5 பேரை கைது செய்தனர். பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரானோர் மீது நடவடிக்கை எடுக்க சதித் திட்டம் தீட்டியதால் 5 பேர் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 3.8 கிலோ தங்கப் பசையை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரு பெண் பயணி உட்பட 6 பயணிகளை கைது செய்து விசாரணை.
இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வடிவமைக்கும் பள்ளி வாகனங்களை மட்டும் பதிவு செய்ய கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி நந்தினி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்.
“பிளஸ் டூ தேர்வில் தடைகளை கடந்து, வறுமை நிலையில் இருந்தாலும் வற்றாத அறிவுச்சுடராக, தேர்வில் வென்று சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ செல்வங்களை வாழ்த்துகிறேன். “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்கிற குறள் மொழிக்கேற்ப, கல்வி ஒன்றே நமது செல்வம், நம்மை உயர்த்தும் என்பதை எப்போதும் மனதில் கொள்வோம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
திருத்துறைப்பூண்டியில் அருகே பாண்டியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதமால் இருந்த ஓட்டுநர் முற்பட்டபோது பேருந்து கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. சத்தம் கேட்ட வந்த பொதுமக்கள் பேருந்தில் இருந்த 30 பேரை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
உதகை அருகே 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 34 மாணவர்களும் கணிதப் பாடத்தில் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வி என முடிவு வந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் உதகை சாம்ராஜ் அரசு உதவிகள் பெறும் பள்ளியில் மாணவர்களிடையே முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#JUSTIN “மே 23ல் ஜப்பான், சிங்கப்பூர் பயணம்”#MKStalin #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/C6op8TZTd4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 9, 2023
முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் மிட்சுபிஷி நிறுவனத்துடன், 1891 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வருகின்ற 23ம் தேதி ஜப்பான் , சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க வரும் 23 ம் தேதி ஜப்பான்,சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளேன். இந்திய அளவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என பேசினார்.