உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்
மேலும் படிக்க ...மலையாளத்தில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்திற்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் அந்த படத்தில் தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் நாளை வெளியாகாது. இந்தி பதிப்பு மட்டும் சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இந்திய வரலாற்றில் ஆளுநர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. திடீரென அதை அவர்கள் உணர்ந்து சம்பந்தமில்லாமல் தீவிரமாக பேசி தங்களை முட்டாளாக்கிக் கொள்கிறார்கள். ஆளுநர்கள் பதவிக்குரிய கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
Governors r never taken seriously in Indian history.
Suddenly they seem to have realised it and now they make a fool of themselves by talking seriously …but out of context .They have to maintain the decorum & not act as a cheep James bond.— pcsreeramISC (@pcsreeram) May 4, 2023
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு தொடங்குகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தமிழக முழுவதிலும் இருந்து 5,800 சிறப்பு பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளும் இயக்கம்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பை தமிழகத்தில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம். வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 10 மணி அளவில் அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடசந்தூர், ஆத்தூர் ,நிலக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை
பாஜக தலைவர் போல ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு. பதவி பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாகம் குறித்து பேசுவதாகவும் கண்டனம்.
அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் – காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் – காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் அறிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும்
#Jailer is all set to hunt from August 10th💥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 #JailerFromAug10 pic.twitter.com/Wb7L0akJ4k
— Sun Pictures (@sunpictures) May 4, 2023
– வீடியோ வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடித்து வருவதால் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது – சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.
பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றம் வழக்கை கையில் எடுத்துள்ளபோது நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து.
சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது எதிர்திசையில் வந்த ஆட்டோ மோதி விபத்து. ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண் குழந்தைகள், மூன்று பெண்கள், ஆட்டோ ஓட்டுனர் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி. மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை..
வருணா தொகுதியில் சித்தராமையாவுடன் இணைந்து வாக்கு சேகரித்தார் நடிகர் சிவ ராஜ்குமார். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிவராஜ்குமார் அளித்த பேட்டியில், “ மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு நல்ல அலை உள்ளது. கடவுள் அருளால் முடிவுகளை பொருத்திருந்து பார்க்க வேண்டும். வருணா தொகுதியில் சித்தராமையாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்
திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், திசை திருப்பும் வகையில் திரிவு வேலைகளை செய்யக்கூடிய அரசியல் கட்சியினர் நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அவதூறுகளை பரப்புவதையே வாடிக்கையாக கொண்டிருப்பது இருக்கிறார்கள்.
இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்களில் பங்கேற்க கூடிய சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும் புள்ளி விவரங்களுடனும் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகி இருக்கிறது என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்.
இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானைலை மையம் அறிவிப்பு.