செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
— Rajinikanth (@rajinikanth) May 27, 2023
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இன்று காலையில் நடமாடிய அரிசிக்கொம்பன் யானை இ.பி.ஆபிஎஸ் சாலைக்கு தெற்கே உள்ள தனியார் வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்தது. சுமார் 4மணி நேரத்திற்கு மேலாக அதே இடத்தில் தங்கியுள்ள அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தற்போது அரிசிக்கொம்பன் யானை உள்ள பகுதிக்கு அருகில் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வனத்துறையினரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பிரதமர் திருக்குறளை மேற்கோள்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி”(திருக்குறள் 542) –
(The earth looks up to sky and thrives,
mankind to king’s sceptre of justice)Hon @PMOIndia ,
My Hearty greetings for the inauguration of the new Parliament building, the “Icon of Democracy” to… pic.twitter.com/vbtMuZ9utV— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 27, 2023
”வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானையைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்கு விடுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. சிக்கலான சூழ்நிலை இருந்தபோதிலும், யானையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.” என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானைகளை கண்காணிக்கும் குழுவினர் விரைவில் தேனியை அடைய உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஜோடி கும்கிகள் கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விரைவில் அந்த கம்பம் வந்தடையும். 10 வனத்துறை அதிகாரிகள் தலைமையில் 150 வனத்துறை ஊழியர்கள் யானையைக் கண்காணிக்கும் இடத்தில் உள்ளனர்.
கம்பம் இ.பி.ஆபிஸ் சாலையில் உள்ள புளியந்தோப்பில் காலையில் இருந்து நின்றிருந்த அரிசிக்கொம்பன் யானை தற்போது அங்கிருந்து இடம்பெயர்ந்தது.
இ.பி.ஆபீஸ் அருகே உள்ள புளியந்தோப்பில் இருந்து தெற்கு பகுதிக்குள் அரிசிக்கொம்பன் யானை சென்றது.
வனத்துறையினர் அதனை பின்தொடர்ந்தது கண்காணித்து செல்கின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கல்லல் குழும விவகாரம் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் கல்லல் குழுமத்துக்கு சொந்தமான சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ED has provisionally attached various immovable properties across Tamil Nadu, on 25/5/2023 valued at Rs. 36.3 Crore and further attached Rs. 34.7 lakh available in the bank account of M/s Udayanidhi Stalin Foundation in the case of Kallal Group and others.
— ED (@dir_ed) May 27, 2023
தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் யானை நடமாட்டத்தைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என ஓ.பன்னீர் செல்வம் கருத்து.
நடப்பாண்டில் மகளிர் இலவச பயணத்திற்காக ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது போக்குவரத்துதுறை எப்படி தனியார்மையமாகும்?
கருணாநிதி வழி வந்த ஆட்சியில் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் பேச்சு.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பில் குறைகள் இருந்ததையடுத்து அதை ரத்து செய்தது நியாயமல்ல என ராமதாஸ் ட்விட்டரில் பதிவு.
மொழிக்கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடியுடன் விவாதம் நடத்த தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டிருந்த நிலையில், சவாலுக்கு தயார் என அமைச்சர் பொன்முடி பேட்டி.
சென்னையில் எந்த இடத்தில், எந்த நேரத்தில் விவாதிக்க அண்ணாமலை சொன்னால் விவாதிக்க தயார் என பொன்முடி கருத்து.
மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக தனக்கு போன் கால் செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்வி சேகர் புகார் அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் கர்நாடக தேர்ததில் தமிழ்நாடு பாஜக தலைவவர்களின் பங்களிப்பு பற்றி ஊடகங்களில் பேசியதால், தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கில் ஈபிஎஸ்-க்கு எதிரான சாட்சியாக ஓபிஎஸ் சேர்ப்பு.
புகார்தாரர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஓபிஎஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை அறிக்கை நேற்று சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனடிப்படையில் ஓபிஎஸ்-யிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59ஆவது நினைவு நாளில், அவர் நினைவுதினத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மரியதை.
கரூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ஐந்துக்கும் மேற்பட்ட நபர் கூடியது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் திமுகவை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட நபர்கள் மீது கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நான்கு வெவ்வேறு இடங்களில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அடையாளம் தெரியாத 50க்கும் மேற்பட்ட திமுக நபர்கள் மீது கரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டாவது இடங்களில் நாளாக வருமானவரித்துறை சோதனை.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உட்பட மொத்தம் 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.