செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள SV கங்காபூர்வாலா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மும்பை, குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் மழையின் காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.
யூட்யூபர் இர்பான் கார் மோதி எஸ்ஆர்எம் கல்லூரி காவலாளி பத்மாவதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான CUET இளங்கலை நுழைவுத் தேர்வு மற்றும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார்.
குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும், போலிசார் மிரட்டலால் ஒப்புக்கொண்டதாகவும் தீட்சிதர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்படவில்லை.
ஆரூத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 2 நாளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
வருமான வரி துறை சோதனை நேர்மையாக நடைபெற வேண்டும் என கூறி அங்கிருந்தவர்களை வெளியேற கூறிவிட்டேன். ஆனால் அதிமுகவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்ற போது சாமியானா பந்தல் எல்லாம் போட்டு உணவு அளித்ததை பார்த்தோம்.
சோதனை என்கிற பெயரில் வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த விரும்ப தகாத செயல்கள் நடைபெற்று உள்ளது. 2006க்கு பிறகு ஒரு சதுர அடி நிலம் கூட நான் வாங்க வில்லை. எங்கள் குடும்பத்தினர் புதிய சொத்துக்கள் எதுவும் இனியும் வாங்க மாட்டோம்
– அமைச்சர் செந்தில் பாலாஜி
சோதனை எனக்கும் புதிதல்ல. திமுகவிற்கும் புதிதல்ல. ஐடி சோதனை நான் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளேன். இதற்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் சோதனை என்ற பெயரில் அழைத்தனர். ஏமாற்றாமல் வருமான வரி செலுத்துபவர்கள் மீது சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி சோதனையை எதிர்கொள்ளத் தயார். எத்தனை சோதனை நடந்தாலும் முழு ஒத்துழைப்பு தரப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி
“எனது சகோதரர், நண்பர்கள் இல்லம் உள்பட பல இடங்களில் இன்று காலை துவங்கி வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. எனது இல்லத்தில் சோதனை நடைபெறவில்லை. சோதனை நடைபெற்றாலும் கவலை இல்லை” – சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்துவது குறித்து வருமான வரித்துறையினர் முன்கூட்டியே எங்களுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பு கோரவில்லை. தற்போது தான் எங்களிடம் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளனர். அவர்கள் சோதனை நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்பில் தங்களது மீது தாக்குதல் நடத்தியாக அவர்கள் யாரும் காவல்துறையிடம் புகார் கொடுக்கவில்லை – திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தகவல்.
தேர்தல் தோல்வியால் பாஜக நடுக்கத்தில் உள்ளது. போர்படைக்கு காலட்படை, குதிரை படை ஆட்களை அனுப்புவது போல வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை அனுப்புகிறார்கள். இந்த அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு
– திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுதின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். புதிய நாடாளுமன்றம் திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் கருத்து
அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
விரிவான செய்திக்கு – க்ளிக் செய்க
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை. திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நிறுத்தினர், சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் தடுத்ததால் பாதுகாப்பு கேட்டு அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கரூரில் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 9 இடங்களில் சோதனை நடைபெறவில்லை என தகவல்
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியை தமிழக முதல்வர் தேர்வு செய்கிறாரோ அந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடத்தில் சோதனை செய்ய வந்த வருமானவரித் துறையினர். சோதனை செய்யவிடாமல் தடுத்து கார் கண்ணாடியை உடைத்ததால் வருமான திரும்பிச் சென்றனர்.
திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் , செஞ்சி பேரூர் செயலாளராக உள்ள காஜாநஜீர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பதவி பறிக்கப்பட்ட காஜாநஜீர் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் உடன்பிறந்த சகோதரர் (தம்பி)என்பது குறிப்பிடத்தக்கது.