செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆவின் நிறுவனத்துக்கு போட்டியாக நாங்கள் களம் இறங்கவில்லை என்று அமுல் நிறுவனத்தின் தமிழ்நாடு பொறுப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் மே 28 அன்று துக்க நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்க உள்ளது. அன்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய உள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை விதி்க்க கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
“வரும் கல்வியாண்டில் உறுப்புக் கல்லூரிகளில் எந்த பாடப் பிரிவும் நீக்கப்படாது. 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது” – உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தகவல்
“சத்தீஸ்கரில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டடத்தை சோனியா காந்திதான் திறந்து வைத்தார். ஆளுநர் திறந்துவைக்கவில்லை. தெலங்கானா சட்டமன்ற கட்டடத்தை முதல்வர்தான் திறந்துவைத்தார்” – புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்காதது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை. இது இந்தியாவின் கவுரவம், அதுவும் தமிழ்நாடுக்கும் பெருமிதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை. இது இந்தியாவின் கவுரவம், அதுவும் தமிழ்நாடுக்கும் பெருமிதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இன்று 31 வது மாமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த ஜெய் சதீஸ்க்கு பிறந்தநாள் என்பதால் அவரை மேடைக்கு அழைத்து மேயர் ராமநாதன் மற்றும் உறுப்பினர்கள் கேக்கு ஊட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
234 தொகுதிகளில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற ஆயிரத்து 500 மாணவர்களை கவுரவிக்கிறார் நடிகர் விஜய். அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் 2 கோடி ரூபாய்க்கு உதவிகள் வழங்க வாய்ப்பு.
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு. ஆவின் பால் உற்பத்தி பகுதிகளில் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த டி.ராஜா நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி எஸ்.வைத்திய நாதனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து.
அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
“சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – கோரிக்கை முன்வைத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளை மூடுகிறது அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் வழியில் பொறியியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லாததால் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.
தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வதற்காக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அதற்கு கண்டனம் என்றால் என்ன செய்வது?. எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார், ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை – அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு.
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்க 20 பேர் கொண்ட ஆதினம் குழு டெல்லி சென்றது. புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் செங்கோலை ஆதினம் குழு பிரதமரிடம் வழங்க உள்ளது.