Tamil Live Breaking News | சிட்னியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர்!

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
24 May 2023 19:14 (IST)

சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை குடியரசுத் தலைவர் நியமித்தார். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 May 2023 19:01 (IST)

கொடைக்கானல் மலர் கண்காட்சி : இனி மாற்றுத்திறனாளியின் உதவியாளர்கள் டிக்கெட் எடுக்க தேவையில்லை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரம், பிரையண்ட் பூங்காவில் மே மாதம் 26.05.2023 முதல் 02.06-2023 வரை நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவின் போது மாற்றுத்திறனாளி மற்றும் உடன் வரும் உதவியாளர் ஒருவருக்கு மட்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று கொடைக்கானல், தோட்டக்கலை துணை இயக்குநர் பெருமாள்சாமி தகவல் தெரிவித்துள்ளார்.

24 May 2023 19:01 (IST)

கொடைக்கானல் மலர் கண்காட்சி : இனி மாற்றுத்திறனாளியின் உதவியாளர்கள் டிக்கெட் எடுக்க தேவையில்லை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரம், பிரையண்ட் பூங்காவில் மே மாதம் 26.05.2023 முதல் 02.06-2023 வரை நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவின் போது மாற்றுத்திறனாளி மற்றும் உடன் வரும் உதவியாளர் ஒருவருக்கு மட்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று கொடைக்கானல், தோட்டக்கலை துணை இயக்குநர் பெருமாள்சாமி தகவல் தெரிவித்துள்ளார்.

24 May 2023 17:48 (IST)

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

24 May 2023 17:32 (IST)

சிங்கப்பூர் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமை‌ச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

 

24 May 2023 16:37 (IST)

சிட்னியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர்

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

24 May 2023 16:19 (IST)

இருவிரல் பரிசோதனை விவகாரம் : சிதம்பரம் கோயிலுக்கு மத்திய அதிகாரி வருகை

ஆளுநர் ரவி சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு. குற்றம் சாட்டப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகளிடம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் வருகை புரிந்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் காவல் துறையிடம் விசாரணை நடத்த உள்ளார்.

24 May 2023 15:21 (IST)

நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலை நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் இருந்து டெல்லி வரை இந்த ரயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

24 May 2023 15:19 (IST)

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் ஒரு வாரத்தில் முடிவை தெரிவிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

ஆடல்-பாடல் , கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால் , ஏழு நாட்களுக்குள் காவல் துறை அதிகாரி பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் அல்லது , அனுமதி இல்லை என எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

24 May 2023 14:31 (IST)

சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

சிங்கப்பூர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தொழில் நிறுவனங்களின் சிஇஓக்களோடு கலந்துரையாடி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை முதல்வர் சந்தித்து பேசினார்.

24 May 2023 14:02 (IST)

ராஜபாளையத்தில் 27 பார்களுக்கு சீல்

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 27 பார்களுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

24 May 2023 13:23 (IST)

விஜயகாந்த் உடல்நலம் நன்றாக உள்ளது - விஜய பிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் நன்றாக உள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கஷ்டம் தான். இருந்தாலும் அவர் 100ஆண்டுகள் நலமுடன் இருப்பார் – விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

24 May 2023 12:50 (IST)

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்

வெப்ப சலனம் காரணமாக 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

24 May 2023 12:01 (IST)

சென்னை உயர்நீதிமன்றம் - புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம். கோவையில் 1962ஆம் ஆண்டு பிறந்த அவர், சென்னை சட்டப்படிப்பை முடித்தார். 1986ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2015ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய பொறுப்பு நீதிபதியாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

24 May 2023 11:45 (IST)

புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்

“புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடிதான் திறந்துவைக்கிறார். தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும்” – உள் துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

24 May 2023 11:43 (IST)

முதல்வரின் பயணத்தை விமர்சிப்பதா? இபிஎஸுக்கு தங்கம் தென்னரசு பதில்

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு சென்றுள்ள முதல்வரின் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதா? தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்சி நடத்தியவர் இபிஎஸ். அதிமுக ஊழல், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை திசை திருப்பவே முதலமைச்சர் மீது இபிஎஸ் அவதூறு” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

24 May 2023 11:03 (IST)

பள்ளிகளை ஜூன் 1 திறக்க வேண்டாம் - சீமான்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். ஒன்றாம் தேதியே திறப்பதற்கு பதிலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்த பின்னர் திறக்க வேண்டும்  – தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்

24 May 2023 10:26 (IST)

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா - திமுக புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிக்கிறது என அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா அறிவிப்பு. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து திமுகவும் புறக்கணித்தது.

24 May 2023 10:23 (IST)

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு - வைகோ

“முதலீட்டாளர் மாநாடுக்கு அழைப்பு விடுக்க வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் வெற்றியோடு திரும்புவார். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை, அதனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறி பேசுகிறார்கள்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் அழைக்காதது மிகப்பெரிய தவறு. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியல் ஆகிவிடும். நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்

– நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

24 May 2023 09:38 (IST)

5 வயது வரை பேருந்து கட்டணம் ரத்து - அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியீடு. 5 முதல் 12 வயது வரை அரை டிக்கெட் வழங்கவும் அரசு அனுமதி.

3 வயது வரை கட்டணம் இல்லை என்பதை 5 வயது வரை என உயர்த்தி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

 

കൂടുതൽ വായിക്കുക