செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தமிழ்நாட்டின் அனைத்து இளம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வில் வென்ற அனைத்து பெண் சாதனையாளர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். மக்கள் சேவையில் அனைவருக்கும் நிறைவான மற்றும் திருப்திகரமான பணி அமைய வாழ்த்துகிறேன். – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 23, 2023
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் 07.06.2023 வரை பதிவு செய்து கொள்ளலாம்
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சு தேர்வு செய்ததையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் களமிறங்கிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:-
கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த சிவ.வீ. மெய்யநாதன், மாயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்
நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி நியமனம் என உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப்பொறுத்தவரை சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்த இவர் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. இறுதி தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,011 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்றுப் பார்க்கலாம்.
வெப்ப சலனம் காரணமாக 23.05.2023 முதல் 27.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்
– வானிலை ஆய்வு மையம்
விரிவாக படிக்க – க்ளிக் பண்ணுங்க
. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஏற்கனவே குடும்பத்துடன் கடந்த ஆண்டு துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது மீண்டும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு தொழில் முதலீடுகள் ஈர்ப்பு என்ற பெயரில் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ளார் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சரத் பாபு உடலுக்கு நடிகர்கள் சரத்குமார், சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், ராதிகா ஆகியோர் நேரில் அஞ்சலி.
மரக்காணம் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்.
தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து இறுதி மரியாதை. பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், “சரத்பாபு நல்ல நண்பர். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருந்தது. எப்போதும் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுவார். சிகரெட் பிடித்து உடலை கெடுத்து கொள்ள வேண்டாம். ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று சொல்லுவார்” என தெரிவித்தார்.
சென்னை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவே ஜப்பான், சிங்கப்பூர் பயணம். 9 நாட்கள் பயணத்தில் தொழிலதிபர்களை சந்திக்கிறேன். ஜூலை 2021 முதல் இதுவரை 221 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. – சிங்கப்பூர் புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
10, 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தோர் இன்று முதல் வரும் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 128 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு. ஆகஸ்டில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு இளங்கலை முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம்
மூத்த நடிகர் சரத்பாபு ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். சரத் பாபு உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தற்போது எடுத்துவரப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்குப் பின்னர் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இன்று மாலை 3 மணி அளவில் கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 99ஆயிரத்து 558 பேர் விண்ணப்பம். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54ஆயிரத்து 638 பேர் விண்ணப்பம். 2,44,104 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மதுபாரில் மதுவாங்கி குடித்து உயிரிழந்த விவகாரத்தில் விவேக் நண்பரான தமிழரசன் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை. மூன்றாவது நாளாக பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரையில் மரணம் தொடர்பாக யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.