உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இதயத்தை சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்தினர்
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 235 ரன்கள் குவிப்பு
ஒரே வாரத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 85 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை. கடந்த ஞாயிறு முதல் இந்த ஞாயிறு வரை 85 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு களித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு
மதுரையில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது
கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்
நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் ரூ 20 பைசா உயர்ந்து ரூ 4.50 ஆக விலை நிர்ணயம்
புதுக்கோட்டை மாவட்டம் சீமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுமுட்டியதில் 22 வயது வீரர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து சுற்றுலா வந்த 12வயது சிறுவன் சிற்றாறு இரண்டாம் அணையில் விழுந்து மாயம். தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணி தீவிரம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களை வாபஸ் பெற முடிவு – புகழேந்தி
ஆரணி அருகே சுமார் ஒரு மணி நேரமாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது
சிஐடியூ, ஏஐடியூசி, விசிக ஐஎன்டிசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும்
26 ஆம் தேதி ஆலை வாயில்களில் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 27 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கண்டித்து மே 12 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கர்நாடகா: காந்தி நகர் தொகுதியில், அதிமுக பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
சூடானில் உள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதுவரை 84 நான்கு பேர் தொடர்புக்கொண்டுள்ள நிலையில், தமிழர்கள் தொடர்புகொள்ள 9600023645 என்ற எண் அறிவிப்பு – அமைச்சர் மஸ்தான்
வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு வேண்டுகோள்.
12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபாளர் சீமான் அறிவித்துள்ளார்.
பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் முறையிடுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.