Tamil Live Breaking News | தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
22 May 2023 21:47 (IST)

தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாட்டில் 7  ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யபப்பட்டுள்ளனர். நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

தொல்லியல் துறைக்கு கூடுதல் பொறுப்பாளராக, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுள்ளார்.

நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் வசம் இருந்த சிறப்பு திட்ட செயலாக்க துறை ககன்தீப் சிங் பேடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் மாற்றம் செய்து உத்தரவிட்ட முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில் ராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் ஆகியோர் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

22 May 2023 20:12 (IST)

பண்பட்ட நடிப்பினால் முத்திரை பதித்தவர் சரத்பாபு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்

22 May 2023 20:10 (IST)

நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

22 May 2023 20:06 (IST)

"இது ஈடுகட்ட முடியாத இழப்பு.." - சரத்பாபு மறைவுக்கு உருக்கமாக பதிவிட்ட ரஜினிகாந்த்!

22 May 2023 20:04 (IST)

சரத்பாபுவின் புன்னகை மரணத்தை மறக்கச் செய்கிறது - வைரமுத்து இரங்கல்

22 May 2023 19:24 (IST)

அதிமுக சார்பாக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு

விஷச் சார உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்  எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இல்லாத (அதிமுக மாவட்டங்களில்) வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக தலைமை  தெரிவித்துள்ளது.

22 May 2023 19:03 (IST)

விஷச் சாராயத்திற்கு எதிராக பேரணி : ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு

விஷச் சாராயம் தொடர்பாக பேரணி நடத்திய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 5,500 அதிமுகவினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

22 May 2023 18:42 (IST)

நடிகர் சரத்பாபு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் விடுத்துள்ள அறிக்கையில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் இரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

22 May 2023 18:09 (IST)

நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : டிடிவி தினகரன் இரங்கல்

22 May 2023 17:49 (IST)

விஷச் சாராய பலி : 12 பேர் மீது கொலை வழக்கு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாரயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரம் சிபிசிஐடி போலீசார் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

விஷ சாராயம் வழக்கின் ஆவணங்களை மரக்காணம் காவல் துறையினர் இன்று பிற்பகலில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், கெமிக்கல் நிறுவன உரிமையாளர் இளையநம்பி உள்ளிட்ட 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாளை முதல் குழுக்களாக பிரிந்து விசாரணை தீவிர படுத்த உள்ளனர். 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

22 May 2023 17:47 (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 

சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடி விபத்து  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட அறைகளில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு அரைகள் தரைமட்டமாகின. இருப்பினும்
தொழிலாளர்கள் அனைவரும் வெளியே சென்றதால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

22 May 2023 16:39 (IST)

அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகள் பெற எந்த தடையும் இல்லை - போக்குவரத்து துறை அறிவிப்பு

 

2000 ரூபாய் நோட்டுகளை பயணிகள் கொடுக்கும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளப்படும். வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து வாங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பேருந்தில் 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துனர்கள் பெறக்கூடாது என உத்தரவு திரும்ப பெறப்பட்டதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

22 May 2023 15:17 (IST)

"கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்பு பணியின்போது உயிர் பலி ஏற்பட்டால் கடும் நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில், கழிவு நீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியில் இனி எந்தவொரு இறப்பும் நேரக்கூடாது எனவும் கவனக் குறைவாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

22 May 2023 14:43 (IST)

நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு உடல்நலவு குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்.

விரிவாக படிங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

22 May 2023 13:37 (IST)

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் ஒன்றாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

22 May 2023 13:16 (IST)

திமுக அரசு மீது ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனு..!

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  சந்திப்பு.  சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் அரசின் மீதான புகார் பட்டியலை அளித்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி பெஞ்சமின், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

22 May 2023 12:42 (IST)

பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜித்

அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு

“மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்”

– அஜித்குமார் அறிக்கை

22 May 2023 12:08 (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடு பயணம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நாளை காலை 11.25 மணிக்கு சிங்கப்பூர் செல்கிறார்.

22 May 2023 11:50 (IST)

ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்க உள்ளனர்.

இந்த பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி,  திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார்,  விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், பா.வளர்மதி, கோகுல் இந்திரா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

22 May 2023 11:25 (IST)

பிரதமர் மோடி பற்றிய அவதூறு - பிசிசிக்கு சம்மன்

பிரதமர் மோடி பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்திற்கு சம்மன். குஜராத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை. விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

കൂടുതൽ വായിക്കുക