உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு வீரசிவாஜி நகர் பகுதியை சேர்ந்த பெண் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளது.
தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலையை வலியுறுத்தும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூரில் ஓரிரு இடங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம், புதுக்கோடை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, தூத்துகுடி, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துவருகிறது.
சிங்கப்பூர் நாட்டின் இரு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த இரு செயற்கை கோள்களை, இஸ்ரோ இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிற்பகலில் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட ‘டெலியோஸ்-2’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளும், 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்பட்டது.
586 புவி தாழ்வட்ட பாதை வரை நடைபெற இருக்கும் இந்த விண்வெளி பயணத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ராக்கெட்டை விட்டு பிரியாத கருவிகள் மூலம், சில அறிவியல் சோதனைகளும் நடத்தப்படவிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்; தவறினால், தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார்.
தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரக் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது.
ஏற்கெனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொழில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்த ஆலோசனை செய்யப்படவுள்ளது.
மேலும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி, ஒரு நாள் ஓய்வு என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது.
ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கம் பொருத்தமற்றது.
8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை (குடநஒibடைவைல) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது ஆகும்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருக்கிறது.
மேலும், தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பணி நேரத்தை 12 மணி நேரம் வரை அதிகரித்துக்கொள்ள வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், ஏப்ரல் 24ம் தேதி தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைதேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றத்தையும் செல்லாது என அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா, விதிமீறல் பிரச்சாரம், குறித்த புகாரில் நடவடிக்கை இல்லை என மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-சேலம் இடையே துண்டிக்கப்பட்ட ரயில் பாதை சரி செய்து மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. நேற்று அதிகாலை ராயக்கோட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டது. நேற்று முழுவதும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மீண்டும் ரயில் அந்தப் பாதையில் இயங்க தொடங்கியது.
அதிமுக டெல்லி அலுவலகம் விரைவில் திறக்கபட உள்ள நிலையில் அதை பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி 26ஆம் தேதி டெல்லி செல்லவிருக்கிறார். அப்போது அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுச் செயலாளராக தேர்வுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக டெல்லி செல்விருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியுள்ளது. அதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாகவும், வேறு எந்த தொகுதியிலும் அதிமுக போட்டியிடவில்லை எனவும் காந்திநகர் தொகுதியில் ஓ பி எஸ் தரப்பு வேட்பாளர் மனு ஏற்கப்பட்ட நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை எனவும் அதிமுக அந்த கடித்ததில் விளக்கமளித்துள்ளது.