உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி. 135 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ளது சென்னை அணி.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் வெளியிட்ட அறிக்கையில், “ரமலான் மாதத்தின் ஷவல் மாதத்துக்கான பிறை தென்பட்டதால் தமிழகம் முழுவதும் நாளை ரமலான் பண்டிகையை கொண்டாடலாம்” என அறிவித்துள்ளார்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட வெளிநடப்பு செய்துள்ளன.
மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல. விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது ஒருவகை உழைப்புச் சுரண்டலே. எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் திராவிட மாடல் நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரைத் தவிர்க்கவேண்டும். மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதியாகவே நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், கோ.புதூர், மதிச்சியம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் B.Tech இரண்டாம் ஆண்டு படிக்கும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம். ஏப்ரல் 3வது வாரத்தில் 11 மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 10% க்கும் மேல் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இன்புளுயன்சா போன்ற சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, வெங்கடசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றுன் கூடிய கனமழை செய்து வருகிறது. வேலூரில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ஆம் தேதி திறக்கப்படும் – கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவிப்பு.
அந்தந்த கல்லூரிகள் மொத்த வேலை நாட்களை ஈடு செய்து, கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை முடிவு செய்துகொள்ளவும் அனுமதி.
தமிழ்நாட்டில் கடந்த 5 சட்டமன்றத் தேர்தல்களில் வென்ற வேட்பாளர்கள், தொகுதியில் உள்ள 10 முக்கிய பகுதிகள், மொத்த வார்டு மற்றும் பூத் எண்ணிக்கை உள்ளிட்ட தொகுதி வாரியான விவரங்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் ஹரி பத்மன் ஏப்ரல் 3ல் கைது செய்யப்பட்டார். மாணவிகள் தன் மீது மிகுந்த மதிப்பை வைத்துள்ளதாகவும், தன் வளர்ச்சியை பிடிக்காத சிலரின் தூண்டுதலில் மாணவிகள் அளித்த பொய் புகாரில் வழக்குப்பதிவு என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. மேலும் வழக்கை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 832 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 28 நபர்களுக்கும், காரைக்காலில் 11 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்கள்,மாஹே 1 நபர்களும் என 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 391 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி புதுச்சேரியில் ஒருவர் உயிரிழப்பு..
தமிழ்நாட்டில் சாதி சண்டைகள், மத சண்டைகள் இல்லை.துப்பாக்கிச் சூடு இல்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை.கலவரங்கள் இல்லை.இப்படி என்னால் இல்லை இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே போக முடியும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை போற்றி மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்கியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட தமிழக கேரளா பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலையில் பல்லக்கில் சுவாமி வீதி உலா மற்றும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெறும். 9 வது நாள் (29-04-2023) திருவிழாவில் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10 வது நாள் (30-04-2023) அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த பெரியகருப்பி. இவரது இளைய மகன் ஆறுமுகம் குடிபோதையில் தாயுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த பெரிய கருப்பியின் மூத்த மகன் கணேசன் விலக்கி விட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணேசன் கட்டையால் தாக்கியதில் ஆறுமுகம் உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்த வத்திராயிருப்பு காவல்துறையினர் தப்பி ஓடிய கணேசனை தேடி வருகின்றனர்.
சௌதியில் பிறை தெரிந்ததை தொடர்ந்து நாகை அடுத்த நாகூர் கடற்கரையில் ரமலான் சிறப்பு தொழுகை. ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற தொழுகையில், ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த 2,000-க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களின் கணக்கிலிருந்து Blue Tick-ஐ நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உடையது என்று மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்.
உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நீர் பனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது உதகையில் மழை பெய்து வந்தாலும் அதிகாலை நேரங்களில் நீர் பனியின் தாக்கம் காணப்படுகிறது. புல் மைதானங்கள் மட்டுமின்றி வாகனங்கள் மீதும் மழைநீர் விழுந்தது போல் நீர் பனி கொட்டியுள்ளது.