உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்..
மேலும் படிக்க ...லக்னோவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் முன்னிட்டு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு நடத்தும் மிஸ் கூவாகம் அழகி போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதும் போட்டி மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 3-ம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (02.05.2023) வழக்கம் போல் திறந்து இருக்கும். தொடர் விடுமுறை காரணமாக பார்வையாளர்களுக்காக செவ்வாய்க்கிழமை இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 4ந் தேதி முதல் துவங்கும் என உயர்கல்வித்துறை தகவல். ஓரிரு நாளில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. ப்ளஸ் டூ தேர்வு தேர்வு முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக 4ம் தேதியிலிருந்து ஆன்லைன் பதிவு துவங்கும் எனக் கூறப்படுகிறது.
என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நெய்வேலி கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளது. அதில் பச்சை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தினமும் அரை லிட்டர் நத்தினி பால் இலவசமாக வழங்கும் திட்டம் இடம் பெற்றுள்ளதாக தகவல்
சென்னையில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மே தின பூங்காவில் பேசிய மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது என அறிவித்தார்.
நாகை அருகே பொரவாச்சேரியில் விவசாய சங்கத் தலைவரின் பொலிரோ கார் நள்ளிரவு மோதியில் மிதிவண்டியில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலே பலி. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற காரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரிப்பு. இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1000 கன அடியாக இருந்து.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் 22 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது. புதுச்சேரியில் இருந்து குமுளி செல்லும் 2 பேருந்துகள், திருப்பதி செல்லும் 3 பேருந்துகள், ஓசூர் மற்றும் காரைக்கால், கோயம்புத்தூர் செல்லும் தலா இரண்டு பேருந்துகள், காரைக்கால் மற்றும் நாகர்கோவில் செல்லும் பேருந்துகள், மாகி,ஏனாம்,சென்னை என 22 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது. 15 ஆண்டுகளுக்கும் மேலான பயன்படுத்தும் அரசு பழைய வாகனங்களை ஒழிக்கும் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை.