உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்
உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்
மேலும் படிக்க ...தமிழ்நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை 116, கோவை 75, கன்னியாகுமரி 35, செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “கிண்டியில் உள்ள ராஜ்பவன் நமது இடம், ரேஸ் கோர்ஸும் நமது இடம்தான். முதலமைச்சரின் ஆட்சி காலத்தில் புதிய ஒரு சட்டமன்றத்தை கட்ட வேண்டும். விரைவில் முதலமைச்சர் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார்” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக பேச்சு. பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் கூடி ஆலோசனை நடத்த வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கி கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக கட்டட உரிமையாளர் பரத்சந்திரன் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
தன் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என நோட்டீஸ்.
போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை மையக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பாக ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு டெல்லி தலைமைக்கு கருத்துகளை அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் வகையில், அரசியலைமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம். இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியை தாண்டியதாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. சீனாவை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகமாக இருப்பதாக ஐ.நா அறிக்கையில் தகவல்
சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணியின்போது இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி தொகுதியில் கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
சென்னை முழுவதும் பைக் ரேஸை தடுக்க சிறப்பு வாகன தணிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பைக் ரேஸில் ஈடுப்பட்ட நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் 22 வழக்குகள் பதிந்து 22 இருசக்கர வாகங்களையும், சட்டம் ஒழுங்கு போலீசார் 11 வழக்குகள் பதிந்து 11 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக 33 வழக்குகள் பதிந்து 33 இரு சக்கர வாகங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 16ஆம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது முன் பதிவில்லா ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர்.இதில் கடையநல்லூரை சேர்ந்த கலா என்ற பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் திருமங்கலம் கூழையாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் முத்து முனியாண்டி 20 கைது செய்யப்பட்டு மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முத்து முனியாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். முத்து முனியாண்டி திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. “ரங்கா.. கோவிந்தா..” கோஷங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
IFS நிதி நிறுவன மோசடி வழக்கில் ரூபாய் 5 கோடி லஞ்சம் பெற்றதால் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு.
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப்படைக்கும் இடையேயான சண்டையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,800 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.