உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஷச் சாராய விற்பனையைக் கண்டித்து மே 20-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சித்தராமையா கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி வரை தேதியை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பதினெட்டாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தேதியை அரசு தேர்வுகள் துறை நீட்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு வரும் 21-ம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
தமிழர்களின் வீரமிகு பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடை ஏதுமில்லை எனும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கும் – நம் பாரம்பரிய விளையாட்டுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்க்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதற்காக நாளை மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்லவுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாவதை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்.
ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீப்பளித்த நிலையில், தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
தமிழர்களின் வீர விளையாட்டில் முதன்மையானதாக கருதப்படும் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க தீவிர முயற்சி எடுத்த நமது பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடாகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்ட பிறகு, சித்தராமையாவும் தானும் ஒற்றுமையாக இருப்பதாக டி.கே.சிவக்குமார் பேட்டி.
“பருத்திவீரன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது “கட்டை” குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் “செவ்வாழை” ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீப்பளித்த நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கருத்து.
ஜல்லிகட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வீரனும் காளையும் ஒன்றாய் வென்ற மகிழ்ச்சி என ட்விட்டர் பக்கத்தில் கருத்து.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் இது தமிழக அர்சின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு வரவேற்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 22ஆம் தேதி பேரணி நடத்த உள்ளதாக அதிமுக அறிவிப்பு