உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7200 மீட்டர் உயரத்தை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை என். முத்தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக கடந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிட தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
12 ம் வகுப்பில் 600 / 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். B.com (புரபசனல் அக்கவுண்டிங்) பாடபிரிவில் மாணவி நந்தினி சேர்ந்துள்ளார். மாணவியின் கல்வி & விடுதி கட்டணங்களை முழுமையாக பிஎஸ்ஜி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.
ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் டெல்லி- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 22 பேர் மரணம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஆளுநர் விளக்கம் கேட்டுள்ள ஆளுநர், விஷச் சாராய மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.535 கோடி பணம் எடுத்துச் சென்ற வாகனம் தாம்பரம் அருகே சித்த மருத்துவமனை வளாகத்தில் பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விநியோகிக்கப்படும் என சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 23, 24 ம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஏழு லீக் போட்டிகளுக்கும் நேரடியாக கவுண்டர் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சி.எஸ்.கே அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் தகவல் அளித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் டிக்கெட் விற்பனை தேதியை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிடும் என தகவல்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. அதிமுக மாநாட்டை ஆக்ஸ்ட் மாதம் மதுரையில் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. உறுப்பினர் சேர்க்கை நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தோழியின் வீட்டுற்கு படிக்க சென்றபோது, தோழி வீட்டில் இல்லாத நிலையில், தோழியின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, “சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் தொழில் அதிருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 7 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் மஞ்சு விரட்டு, ஆடல்,பாடல், கபடி உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கி கோரி தனி, தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மஞ்சுவிரட்டு , கபடி , ஆடல் பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு தாமதிக்காமல் காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஊட்டியில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், இதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தடை விதித்து உத்தரவிட்டனர்.
சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவான வெயில் தமிழகத்தில் நேற்று 20 இடங்களில் வெயில் சதம் அடித்தது. சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினசரி 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று சென்னையில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி என் 10581 என்ற பயன்பாட்டில் உள்ளதை மாவட்ட வாரியாக பிரபலப்படுத்துதல், திங்கட்கிழமைதோறும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தவும் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராடினால் இணைந்து போராட தயாராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி. அதற்கு பதிலளித்த அமைச்சர், “அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் குறை பேசுகிறார்” என்றார்.
தமிழகத்தில் கள் விற்க ஏன் அனுமதிக்கவில்லை?. கள் விற்பனை செய்தால் டாஸ்மார்க் வியாபாரம் பாதிக்கும். மற்ற மாநிலங்களில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். காரணம் அவர்களுக்கு பிராந்தி தொழிற்சாலைகள் இல்லை – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இருவருக்கும் முதல்வர் பதவி என காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக பதவி வகிப்பார் எனவும், பின்னர் டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் தகவல். அதுவரை டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.04.23 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருகிறது தமிழக அரசு . கருணாநிதி ஆட்சிக் காலத்தின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
இன்றளவும் நினைவில் உள்ள திட்டங்கள், தோற்றுவித்த திட்டங்கள், நிறுவிய கட்டடங்கள், சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு தலைப்புகளில் கருணாநிதி ஆற்றிய பணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. கருணாநிதியின் திட்டங்களை ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்த நீர்வளத்துறை, நிதித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, உள்துறை முதன்மைச் செயலாளர்களை கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவ்ரவ் கங்குலிக்கு Y பிரிவில் இருந்து z பிரிவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கான கால வரையறை முடிவுறும் போது, அவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதா? இல்லை குறைப்பதா? என்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும். அந்த வகையில் கங்குலிக்கு அளிக்கப்படும் ஒய் பிரிவு பாதுகாப்புக்கான காலம் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு அளிக்க மேற்குவங்க அரசு முடிவெடுத்துள்ளது. y பிரிவில் பிரபலங்களுக்கு 6 காவலர்கள் பாதுகாப்பு அளிப்பர். Z பிரிவு பாதுகாப்பின்போது 8 முதல் 10 காவலர்கள் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.