உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜுக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிபிசிஐடி டி.ஐ.ஜி ஜுயாவுல் ஹாக் விழுப்புரம் சரக டிஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை பெற்று தர பணம் வாங்கியது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
புகார் கொடுத்தவர்கள் சமரசமாக போனதற்கு எதிரான மனு,வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை கோரிக்கை மனு மீது தீர்ப்பு வழங்கவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக மது கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றை யாரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக 9385678039 என்ற தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்ணை அணுகலாம் என மாவட்ட தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்..
கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய சோதனையில் இதுவரை 1558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ எனக்கு வயிற்று வலி இருப்பதால் நான் டெல்லி செல்லவில்லை காங்கிரசில் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் என்னிடம் யாரும் இல்லை. நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.
கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது… pic.twitter.com/64Fw5RzI7T
— M.K.Stalin (@mkstalin) May 15, 2023
“டாஸ்மாக் விலை அதிகமானதால், கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறார்கள். கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை எனவே கள்ளச்சாராய மரணத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் எங்கும் எதிலும் லஞ்ச மயமாகி இருக்கிறது. இரண்டு வருடத்தில் 30 ஆயிரம் கோடி பணம் சுருட்டல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பணம் மீட்கப்படும். ஆளுநரை சந்தித்து விசாரணை கமிஷன் அமைக்க மனு கொடுக்க உள்ளோம்.” என்றார்.
மேலும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தல் வரும். கள்ளச்சாராயம் குறித்து பல முறை கவனம் கொண்டு வந்தேன். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இந்த அரசு இருந்தது. ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆபிரகாம் (48) என்பவர் உயிரிழந்தார். இதனால் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராய குடித்து பலியான விவகாரத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சட்ட ஒழுங்கு கள்ளச்சாராயம் தடுத்தல் தொடரபாக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், இறப்பிற்கு மெத்தனால் சாராயாம் தான் காரணம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்க்ளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் சம்பத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ஐந்து பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.
“கள்ளசாராயம் குடிப்பதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்”: மருத்துவர் நிருபன் சக்கரவத்தி விவரம்:
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் (38) உயிரிழப்பு. உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு.
சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. பங்காருபேட்டை அருகே பெத்தநத்தம் என்ற பகுதியில் 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. எனினும் ரயிலில் பயணித்தவர்களுக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கர்நாடக முதலமைச்சர் யார் என்கிற அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல். எம்.எல்.ஏ.க்களிடம் கேட்கப்பட்ட கருத்துகள் அறிக்கையாக காங்கிரஸ் தலைமையிடம் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் ரேஸில் உள்ள சித்தராமையா டெல்லி விரைந்துள்ளார்.