உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்..
மேலும் படிக்க ...கர்நாடகா முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுராந்தகத்தில் போலி மதுபானம் வாங்கி குடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணியை வெறும் 59 ரன்களில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றுள்ளது.
காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் கூட்டம் இன்னும் சிறுது நேரத்தில் தொடங்கவுள்ளது. மேலிடப் பார்வையாளர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பாபரியா வந்துள்ளனர்.
பாஜகவில் இளைஞர்கள் நிறைய பேர் போட்டியிட்டனர். நாங்கள் இந்த தேர்தலில் ரிஸ்க் எடுத்தோம். எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பிற்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை நடைபெற்றது 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 13 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் இரண்டரை லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் தேர்வு எழுதி உள்ளனர். இதையடுத்து இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை cisce.org result.cisce.org ஆகிய இணையதளம் வாயிலாக முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் உழைக்காதாவர்களுக்கு கட்சியில் இடமில்லை என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபியான பிரவீன் சூட்டை, சிபிஐ-யின் புதிய இயக்குனராக மத்திய அரசு நியமித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்த 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
ராஜ மூர்த்தி (வயது 60) என்பவர் உயிரிழந்துள்ளார்.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து பலியான சுரேஷ் என்பவரின் உடல் புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வர் போட்டி கடுமையாகியிருக்கும் நிலையில் சற்று நேரத்தில் தேசிய தலைவர் கார்கே டெல்லி புறப்படுகிறார். இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது முதல்வர் விவகாரம் குறித்து ராகுல்காந்தியிடம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்த நிலையில்.
மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவலர் ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்த நிலையில், தடுக்கத் தவறிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் முறையே ரூ. 10 லட்சமும், மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவோருக்கு முறையே ரூ.5 லட்சமும் உதவித்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவனுடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள வேத பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்து பகிர்ந்துள்ளார்.
பாலைத் தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும்..
அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று,
பெற்றவளின் மனம்குளிர கற்று, உற்ற துணையாய்
முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து..
செலுத்தும் நன்றி pic.twitter.com/sCr3CqK997— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 13, 2023
அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என
உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்!
அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என பதிவிட்டுள்ளார்.
— M.K.Stalin (@mkstalin) May 14, 2023
கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மரக்காணம் அருகே
கள்ளச்சாராயம் அருந்தியதால் திரு.சுரேஷ்,திரு.சங்கர்,திரு.தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும் ,மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 14, 2023