இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் மக்கள் குறைகளை எடுத்து கூறும்போது அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி வெளியிடுகிறார்கள். அரசுக்கு எதிராக குறைகளை எடுத்துரைத்தால் எதுவும் மக்களிடத்தில் செல்வதில்லை.
நான் பேசும் கருத்துக்களுக்கு சபாநாயகர் அனுமதி கொடுப்பதில்லை. தொடர்ந்து சட்டமன்றத்தில் இதற்கான குரலை சட்டமன்றத்தில் எழுப்பி வருகிறோம். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரி இல்லை என பலமுறை கூறியுள்ளேன். சட்டம்- ஒழுங்கு தமிழகத்தில் அடியோடு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை உள்ளிட்டவை நடந்து கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.. மேடையில் பேசிய அவர், “ உலகின் பழமையான மொழி தமிழ். ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 50 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரும் ஜுன் மாதன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னும் சற்று நேரத்தில், இரவு சுமார் 8.15 மணியளவில், எனது அமைச்சரவை சகாவான திரு எல் முருகன் இல்லத்தில் நடைபெறவுள்ள தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கவிருக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோர்களில் ஒருவராக நான் இந்த விழாவை பேராவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (NEET (UG) – 2023) விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை மீண்டும் நீட்டித்துள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதுவரை, விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பபங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணித்தள பொறுப்பாளர், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் புதிதாக இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கப்படும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சி.எஸ்.கே.அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனியின் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பிளெமிங் கூறிய நிலையில், பெங்களூருவுக்கு எதிரான சென்னையின் அடுத்தப் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் 16 ஆம் தேதி அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பின்னர், தமிழ் மகன் உசேனுக்கு எடப்பாடி பழனிசாமி புதிய மகேந்திரா ஸ்கார்பியோ காரை வழங்க இருக்கிறார்.
சாவர்க்கரை தொடர்ச்சியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு செய்வதாக சாவர்க்கரின் பேரன் புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம். இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என படத்தை தயாரித்த ஃபைவ் ஸ்டார்ஸ் கிரியேசன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
வருகிற 2024 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே ஆந்திராவில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பதியாக ஆந்திர மாநில ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில், “மா நம்மகம் நூவே ஜெகன்” ( எங்கள் நம்பிக்கை நீங்களே ஜெகன்) என்கிற வாசகத்துடன், ஜெகன் மோகன் ரெட்டி படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வீடுகள், கடைகள் ஆகியவற்றில் ஒட்டப்படுகிறது.
ஆளுங்கட்சியின் இந்த ஸ்டிக்கர் அரசியலுக்கு ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய எதிர்கட்சிகளும் பதிலடியாக ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்துள்ளன. சில இடங்களில் ஆளுங்கட்சி ஒட்டிய ஸ்டிக்கர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்களை திருத்தும் செயல்களில், தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றசாட்டுகளும் சொல்லப்படுகின்றன.
இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் நகரில் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர் ஒன்றை ஒரு நாய் கிழித்து எடுத்து சென்ற சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். அந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் ஜெகன்மோகன் ரெட்டி படத்துடன் கூடிய ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்து எடுத்து சென்ற நாய் மீதும் அந்த நாயின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீதும் புகார் அளித்துள்ளனர். தங்கள் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நாயையும், நாயின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்கள் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா..? அவர்களின் நிலை தற்போது பரிதாபமாக மாறி உள்ளது என்றே சொல்லலாம்.
மிகவும் பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். (விவரமாக படிக்க கிளிக் செய்க)
பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலர் கிருஷ்ண பிரபு ராஜினாமா. ஆருத்ரா மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.