உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்..
மேலும் படிக்க ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை மறுநாள் நடைபெறும் – திமுக தலைமைக் கழகம்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோ நியமனம். தற்போதைய சி இஓ எலான் மஸ்க் நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் பரிந்துரைத்ததாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. ஆளுநர் அப்படி எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் – ஆளுநர் மாளிகை அறிக்கை
டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசியர்களுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 100% எவராலும் இந்த கோரிக்கையை நிராகரிக்க முடியாது. உங்களது கோரிக்கைக்கு அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. இங்கே இருப்பவர்கள் அனைவரும் முழு தகுதியுடன் இருக்கிறீர்கள். காலம் தாழ்த்தப்படுவது என்பது பெரும் அநீதி தான். முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வது எங்களது கடமை. விசிக சார்பில் முதல்வர் கவனத்திற்கு நாங்கள் இதை எடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.
டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இன்னும் 48 மணி நேரத்தில் அரசு பதில் சொல்லாவிட்டால் வரும் 15 ம் தேதி பாஜக போராட்டத்தில் ஈடுபடும். சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வருகின்ற 26,27,28 ஆகிய மூன்று தினங்கள் மலர் கண்காட்சி நடைபெறுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு. கொடைக்கானலில் வரும் 26 ம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை 8 நாட்கள் கோடைவிழா நடைபெறுகிறது.
நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் விண்கலத்தின் சோதனை வெற்றி.
மனிதர்களை பூமியின் தாழ் வட்ட பாதைக்கு அனுப்பி அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தின் கிரையோஜெனிக் என்ஜினின் சோதனை இன்று நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மைய உந்தும வளாகத்தில் நடைபெற்றது .603 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனையில் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு காரணிகள் குறித்த சோதனைகள் நடை பெற்றது. சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெய்வங்கள், ஆவிகளிடம் பேச வைப்பதாகக் கூறி மோசடி செய்த ஆசாமி கைது. மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் சட்டம் கொண்டு வந்துள்ளது போல் தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் இத்தகு சட்டத்தைக் கொண்டு வருவது பொருத்தமாகும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
என் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடுத்தது நகைப்புக்குறியது என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி.
திருவாரூரில் உள்ள தைலமை திரையரங்கில் இன்று பர்கானா திரைப்படம் திரையிடப்பட இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் படத்தை திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள்.
அதனை அடுத்து தியேட்டர் நிர்வாகம் பர்கானா படத்தின் காட்சிகள் அனைத்தையும் ரத்து செய்து நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
தியேட்டர் வாசலில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை.
மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் தலையிடுவது எங்கள் வேலை இல்லை. ஓபிஎஸ் – டிடிவி ஏன் சத்தித்தனர் என நான் கூறுவது சரியாக இருக்காது. ஓ.பன்னீர் செல்வம் மீது தனிப்பட்ட முறையில் மோடி உள்ளிட்ட பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை உள்ளது – அண்ணாமலை
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ், மீஷோ ஆகிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆவடி நாசரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை வரவேற்கிறேன். டி.ஆர்.பி ராஜாவை எதற்காக தொழிற்துறை அமைச்சராக்கினார்கள் என்பது தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக வீராங்கனையின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு.
பாஜகவும், காங்கிரஸும் எங்களுடைய நண்பர்கள்தான். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க மட்டும்தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.