உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்..
மேலும் படிக்க ...மதுரை மாநகர பகுதிகளான கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை, ஆத்திக்குளம், திருப்பாலை, மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோச்சா புயல் இன்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இது போர்ட் பிளேருக்கு மேற்கே 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாரின் தென்மேற்கில் 1100 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது.
இது நாளை மத்திய வங்க கடலில் இருந்து படிப்படியாக கடுமையான தீவிர புயலாக மாறி வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன் பின் 14 ஆம் தேதி காக்ஸ் பஜார், தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளில் கடக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்கும் போது கடுமையான புயலாகவும் காற்றின் வேகம் 150-160 கிலோமீட்டர் முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும்.
மாநில கல்வி கொள்கை குறித்து பேராசியர் ஜவகர் நேசன் குற்றச்சாட்டு ஆதரமற்றது. மாநில கல்வி கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அறிக்கையில் விளக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
“தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு மணி நேரத்தில் இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று கூறினர். அதனைத்தொடர்ந்து உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவன அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
மோக்கா புயல் தீவிரமடையும் காரணத்தினால், மீனவர்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வருவாய் மற்றும் பேரிட மேலாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது. மோக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி வங்கதேசம் – மியான்மர் இடையே மே 14 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாகக் கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களைப் போட்டி தேர்வு நடத்தாமல் பணியமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது என்று கூறியுள்ளார். 2012 இல் நடந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது,இது Promotion, IT துறையை சிறப்பாக நடத்தியது போல் பால் வள துறையயும்,சிறப்பாக நடத்தவேண்டும் என கூறிய தலைவரின் அன்பு வார்த்தைகள் உற்சாகத்தை தந்தது,தலைவரின் ஆணைக்கிணங்க செயல்படுவேன் – பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த “ருத்ரன்” திரைப்படத்தில் நடித்த டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாக சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கருத்து. ஒரு மணி நேரத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரோந்து வாகனத்தை வேகமாக இயக்கி விபத்துக்குள்ளான விவகாரத்தில் காவலர் வள்ளிநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை ஆவடி அருகே உள்ள இல்லத்தில் காவலர் வள்ளிநாயகம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் அரசாணை வெளியீடு. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரி தொடர்பான தர மதிப்பீடு பட்டியல் விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பில் சேருவதற்குக் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் தங்களுக்கான சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான தர மதிப்பீடு பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளின் தரத்தின் புள்ளிவிவரங்கள் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் 4 துறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதிகாரிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இன்று அல்லது நாளை அதிகாரிகளின் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை, அதன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் – சிஎம்ஆர்எல். நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின் ஊர்தி உற்பத்திக்காக ஹூண்டாய் நிறுவனத்துடன் 20 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், வாகனங்கள் தயாரிப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையின் முழு விவரம்.
பெயர் | ஏற்கனவே இருந்த துறை | புதிய துறை |
டிஆர்பி ராஜா | – | தொழில்துறை |
தங்கம் தென்னரசு | தொழில்துறை | நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை |
எம்.பி.சாமிநாதன் | செய்தி மற்றும் விளம்பரம் துறை | தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம் துறை |
பழனிவேல் தியாகராஜன் | நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை | தகவல் தொழில்நுட்ப துறை |
டி.மனோ தங்கராஜ் | தகவல் தொழில்நுட்ப துறை | பால்வளத்துறை |
டெல்லியில் நிலவிவரும் நிர்வாக அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இறுதித் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளனர். மத்திய அரசின் உரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அரசு செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.