Tamil Live Breaking News : மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
10 May 2023 21:30 (IST)

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடஸ் அணிகள் மோதிய போட்டியில், டெல்லி அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

10 May 2023 21:13 (IST)

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

10 May 2023 20:22 (IST)

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. ஆட்சியை அமைக்க 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், கருத்துக்கணிப்புகளின் நிலவரம்.

 

10 May 2023 19:41 (IST)

C-Voters : கார்நாடகாவில் 112 இடங்கள் வரை காங்கிரஸ் பெறவாய்ப்பு..

C-Voters வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
83-95 100-112 21-26 2-6

 

10 May 2023 19:37 (IST)

CGS: 114 இடங்களை பெற்று பாஜக ஆட்சியை தக்கவைக்கும்

CGS வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
 114 86 21 3

 

10 May 2023 19:34 (IST)

MATRIZE : பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்...

MATRIZE வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
79-94 103-118 25-33 2-5

 

10 May 2023 19:30 (IST)

சி- வோட்டர் : கர்நாடகாவில் காங்கிரஸ் 100க்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும்

சி- வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
 83-95 100-112  21-29  2-6

 

10 May 2023 19:26 (IST)

ஏஷியாநெட் : பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்

ஏஷியாநெட் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு:

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
94-117 91-106 14-24 0-2

 

10 May 2023 19:23 (IST)

ZEE நியூஸ் : கர்நாடகாவில் 118 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்

ZEE நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
79-94 103-118 25-33 2-5

10 May 2023 19:16 (IST)

டைம்ஸ் நவ் : கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
78-92 106-120 20-26 2-4

10 May 2023 19:10 (IST)

P-MARQ : கர்நாடக தேர்தலில் 108 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்...

P-MARQ வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
85-100 94-108 24-32 2-6

 

10 May 2023 19:07 (IST)

போல்ஸ்ட்ராட் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்..

போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
88-98 99-109 21-26 0-4

 

10 May 2023 19:00 (IST)

நியூஸ் நேஷன் : பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும்..

நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
114 86 21 3

 

10 May 2023 18:52 (IST)

காங்கிரஸ் முன்னிலை - டிவி 9 கருத்துக் கணிப்பு

டிவி 9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
88-98 99-109 21-26 0-4

 

10 May 2023 18:50 (IST)

ரிப்பளிக் : காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும்.

ரிப்பளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
85-100 94-108 24-32 2-6

 

10 May 2023 18:46 (IST)

ஜான் கி பாத் : கர்நாடகாவில் 117 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும்..

ஜான் கி பாத் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக காங்கிரஸ் மஜத மற்றவை
94 -117  91 – 106 14 – 24  0 – 2

 

10 May 2023 18:15 (IST)

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

10 May 2023 18:04 (IST)

கர்நாடகாவில் வாக்குப்பதிவு நிறைவு..

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதில் மாலை 5 மணி நிலவரப்படி 65.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

10 May 2023 17:45 (IST)

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்..

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், 70 சதவீத வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 May 2023 17:40 (IST)

பாகிஸ்தானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

കൂടുതൽ വായിക്കുക