முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சத்துணவில் சர்க்கரைப் பொங்கல்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சத்துணவில் சர்க்கரைப் பொங்கல்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சத்துணவில் இனிப்பு பொங்கல்

சத்துணவில் இனிப்பு பொங்கல்

கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே, முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

அதே போன்று, கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதியன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: School students, Tamilnadu government