முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த காவலர் : திருச்சியில் பரபரப்பு

காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த காவலர் : திருச்சியில் பரபரப்பு

லால்குடி காவல் நிலையம்

லால்குடி காவல் நிலையம்

லால்குடி காவல் நிலையம் முன்பு சிறைக்காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அருகே லால்குடி காவல் நிலையம் முன்பு சிறைக் காவலர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைக் காவலர் தற்கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரைக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு ராஜா, நிர்மல், சதீஸ் என 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகனான ராஜா லால்குடி கிளை சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், ராஜாவுக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முத்து கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக ராஜா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி சிறைக் காவலர் ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ராஜாவின் மனைவி விஜயா, நிர்மலின் மனைவி ஜெனித்தா ஜாக்குலின் ஆகியோரும் காயமடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து, இரண்டு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியன் விசாரணை நடத்தி மனு ரசீது வழங்கியுள்ளார். இந்நிலையில் ராஜா, நிர்மல் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு ராஜா சென்றுள்ளார்.

லால்குடி காவல் நிலையம் சென்ற ராஜா தான் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், லால்குடி காவல்நிலையத்தில் சரியாக பதிலளிக்காமல் அவரை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த ராஜா போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி காவல் நிலையம் முன்பு நின்று தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ அவரது உடலில் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிக்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் வாசிக்ககொடிய விஷம் கொண்ட ஆப்பிரிக்கப் பாம்புகள்... சென்னைக்கு விமானத்தில் கடத்திவந்த இளம்பெண் கைது... பின்னணி என்ன?

top videos

    இதையடுத்து, சரிவர விசாரணை செய்யாத லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற் செழியன் என்பவரை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடி காவல் நிலையம் முன்பு சிறைக்காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News