முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு... தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு... தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!

ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Jallikattu Judgement | கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் வாசிக்கதமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..

top videos

    இந்நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். ஆனால், மே மாதம் 20ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    First published: