முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்ட ராஜேந்திர பாலாஜி... நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்ட ராஜேந்திர பாலாஜி... நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடிய 6 மாதங்கள் ஆகும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.  இதில், தனது ஜாமின் நிபந்தனைகளை முழுவதும் தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான விசாரணையின் போது, தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்வதற்கான கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.  இது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்க: வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடிய 6 மாதங்கள் ஆகும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 6 மாதங்கள் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

top videos
    First published:

    Tags: Rajendra balaji, Tamil Nadu