முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நினைத்த இடத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை”... ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்..!

“நினைத்த இடத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை”... ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்..!

ஆர்.எஸ்.எஸ் பேரணி

ஆர்.எஸ்.எஸ் பேரணி

உளவுத் துறை அறிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிரான வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தமிழ்நாட்டில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முதலில் 5 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்க முடியும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு அடிப்படை உரிமையை மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : இந்துக்கள் அனைவருமே செல்வந்தர்கள், நன்கு படித்தவர்களாம்… ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்..!

இந்நிலையில் உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு முடிவு எடுக்கும் எனவும், உளவுத்துறை அறிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும், பேரணிக்கு முழுவதுமாக தடைவிதிக்கவில்லை என்றும், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: RSS, Supreme court, Tamil Nadu