முகப்பு /செய்தி /தமிழ்நாடு / யுபிஎஸ்சி தேர்வைத் தமிழில் எழுதி தென்காசி சேர்ந்தவர் தேர்ச்சி... அகில இந்திய அளவில் 621-ம் இடம்!

யுபிஎஸ்சி தேர்வைத் தமிழில் எழுதி தென்காசி சேர்ந்தவர் தேர்ச்சி... அகில இந்திய அளவில் 621-ம் இடம்!

சுப்புராஜ்

சுப்புராஜ்

UPSC CSE Result : யுபிஎஸ்சி தேர்வைத் தென்காசி சேர்ந்த சுப்புராஜ் என்றவர் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வைத் தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்றவர் தமிழில் எழுதி, அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

சுப்புராஜ் தற்போது டேக்ராடூனில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய யுபிஎஸ்சி தேர்வை இவர் தமிழில் எழுதியுள்ளார். இந்த நிலையில் இன்று இறுதி முடிவுகள் வெளியானது. அதில் அகில இந்திய அளவில் 621வது மதிப்பெண் பெற்று சுப்புராஜ் சாதனைப் படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Also Read : யுபிஎஸ்சி: சென்னை எலக்ட்ரீஷியன் மகள் தமிழ்நாடு அளவில் முதலிடம்!

சென்னையைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, 117வது இடத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி, 118வது இடத்தில் நெல்லை சேர்ந்த சுபாஷ் கார்த்திக், 447வது இடம் சென்னையைச் சேர்ந்த மதிவதினி ராவணன் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனைப் படைத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Exam results, Tenkasi, UPSC