முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்எல்சி விவகாரத்தில் இனி கடுமையான போராட்டங்கள் நடைபெறும்... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...!

என்எல்சி விவகாரத்தில் இனி கடுமையான போராட்டங்கள் நடைபெறும்... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு என்எல்சியால் எந்த பலனும் இல்லை. அதனால் என்எல்சி தேவையில்லை என அன்புமணி கருத்து.

  • Last Updated :
  • Cuddalore, India

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில், நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், என்.எல்.சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி. 100 மடங்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார். நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக உள்ளதாகவும், என்.எல்.சி நிறுவனம் 60 ஆண்டுகளாக ஏமாற்றி வருவதாகவும், அன்புமணி சாடினார்.

இதையும் படிக்க :  6 மணி நேரத்தில் கோவை To சென்னை பயணம்.. வருகிறது வந்தே பாரத் ரயில்... 

top videos

    காவல் துறையினரை குவித்து மக்களை மிரட்டி நிலத்தை கையகப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அன்புமணி, தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லாததால் என்எல்சி தேவையில்லை என்றார். இனி கடுமையான போராட்டங்கள் தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

    First published:

    Tags: Anbumani, NLC, PMK, Pmk anbumani ramadoss