என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீடு கொடுப்பதை விட, அந்நிறுவனத்தையே மூடுவதான் தீர்வாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், திமுக எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன், என்எல்சி நிறுவன உயர் அதிகாரிகள், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தலைமை செயலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் நிறைவுபெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாவை ஒட்டி 6 சுரங்கங்கள் அமையவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தங்களது கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி, உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமை செயலாளர் உறுதி அளித்ததாக கூறினார். மீண்டும் ஆலோசனை நடத்தும் வரை நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NLC, Pmk anbumani ramadoss