முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : ஆன்றோர் மன்றம் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உறுதி

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : ஆன்றோர் மன்றம் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உறுதி

கயல்விழி செல்வராஜ்

கயல்விழி செல்வராஜ்

தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் மன்றம் செயல்படாத நிலையில் இருப்பது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, இந்த மன்றம் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசின் நலத்திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு பெற்றுத் தருவதற்காக, ஆன்றோர் மன்றம் உருவாக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டிய இந்த குழுவின் பதவி காலம் கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதன் பின்னர், உறுப்பினர் நியமனமின்றி 2 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது. மேலும் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டிய கூட்டம், கடந்த 27 மாதங்களாக நடைபெறாததையும் நியூஸ் 18 தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அளித்துள்ள விளக்கத்தில், பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து பழங்குடி பிரிவினரையும் உள்ளடக்கி 2 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையத்தைப் போல இந்த மன்றமும் சிறப்பாக செயல்படும் என உறுதி அளித்துள்ளார்.

First published:

Tags: Scheduled caste, TN Govt