முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "ரொம்ப கவனமா பேசுங்க..." - அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

"ரொம்ப கவனமா பேசுங்க..." - அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

Tamil Nadu Cabinet Meeting | அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் தமிழ்நாடு வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க; Tamil Live Breaking News : மே 4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. மதுரை ஆட்சியர்

top videos

    அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும், அதனால் எழும் விமர்சனங்களும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை மூத்த அமைச்சர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கூறிய முதலமைச்சர், ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் மூத்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, TN Cabinet