முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை மற்றும் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை மற்றும் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

Finance Minister Nirmala Sitharaman | 8ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள வருகை மற்றும் புறப்பாடு பகுதியை அண்ணாமலை பார்வையிட்டார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சந்தித்து பேசினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக கூறினர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தார்.

தொடர்ந்து அவர் டெல்லி புறப்படுவதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.  மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையடுத்து, வரும் 8ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள வருகை மற்றும் புறப்பாடு பகுதியை அண்ணாமலை பார்வையிட்டார்.

First published:

Tags: Annamalai, Nirmala Sitharaman, SP Velumani