முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவின் பொருட்களை ஆன்லைனில் வாங்கலாம்... அமைச்சர் நாசர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஆவின் பொருட்களை ஆன்லைனில் வாங்கலாம்... அமைச்சர் நாசர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஆவின்

ஆவின்

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க, ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் நாசர், 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி திருவாரூரை தலைமை இடமாக கொண்டு புதிதாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் எனக் கூறினார்.

நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தூய பால் உற்பத்தியை உறுதி செய்ய தேசிய பால்வள மேம்பாட்டு திட்ட நிதி மூலம் 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமப்புற ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: நடமாடும் வங்கி, அட்சயப்பாத்திரம்...” - ஆடு, மாடு, கோழிகளை புகழ்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க, ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Aavin