முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'செங்கோல்' குறித்து பொய்யான செய்தியை பரப்புகின்றனர்- திருவாவடுதுறை ஆதினம் வேதனை

'செங்கோல்' குறித்து பொய்யான செய்தியை பரப்புகின்றனர்- திருவாவடுதுறை ஆதினம் வேதனை

திருவாவடுதுறை ஆதினம்

திருவாவடுதுறை ஆதினம்

ஒரு அரசு நீதி மாறாமல் இருக்கவே செங்கோல் வழங்கப்படுவதாக தெரிவித்த ஆதினம், தர்மம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அதில் நந்தி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'செங்கோல்' குறித்து சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர் என்று திருவாவடுதுறை ஆதினம் அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 1947ல் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலின் சிறப்பு பற்றி உலகமே பேசுவதாகவும், 75 ஆண்டுகளுக்கு பின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு அரசு நீதி மாறாமல் இருக்கவே செங்கோல் வழங்கப்படுவதாக தெரிவித்த ஆதினம், தர்மம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அதில் நந்தி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதையும் படிக்க : செங்கோல் ஆட்சி மாற்றக் குறியீடாக நேருவுக்கு வழங்கப்பட்டதா? வரலாற்று ஆவணங்கள் சொல்வது என்ன?

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்லவுள்ளதாக கூறிய ஆதினம், தேவாரம் பாடுவது குறித்து நேரில் பார்த்தால் தான் தெரியவரும் என கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Central Vista, PM Narendra Modi