முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு... ஏசி இயந்திரத்தில் சத்தத்துடன் வெளியேறிய புகை...!

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு... ஏசி இயந்திரத்தில் சத்தத்துடன் வெளியேறிய புகை...!

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஏ.சி இயந்திரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து விருது வழங்கும் விழா தொடர்ந்து நடைபெற்றது

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஏ.சி இயந்திரத்தில் இருந்து சத்ததுடன் புகை வெளியேறியதால் சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது.

சரவணம்பட்டியில் கே.ஜி.அறக்கட்டளை சார்பில் நடபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்கும் முன்பு தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் இருந்த ஏ.சி இயந்திரத்தில் இருந்து சத்தத்துடன் புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றனர்.

top videos

    தொடர்ந்து, ஏ.சி இயந்திரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து விருது வழங்கும் விழா தொடர்ந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மொழி, நிலம், இனம் ஆகியவற்றை தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருதினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக திகழும் என்றார். நமது நாட்டின் நூறாவது சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    First published:

    Tags: RN Ravi, Tamil Nadu