முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.சி பிரிவு உரிமைகள் வேண்டும்... சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.சி பிரிவு உரிமைகள் வேண்டும்... சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றிய முதலமைச்சர், ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பின்னும் அவர்கள் மீது தீண்டாமை தொடர்வதாகக் கூறினார். வரலாற்று ரீதியாக ஆதி திராவிடர்களாக இருக்கும்போது பட்டியலின வகுப்பிற்கான சலுகைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை, மதம் மாறியவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் முதலமைச்சர் கூறினார். சாதி என்பது சமூகக் கேடு என்று தெரிவித்த முதலமைச்சர், சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த அடிப்படையில் ஒடுக்கினார்களோ, அதைக் கொண்டே உயர்வடைய வைப்பதுதான் சமூகநீதி தத்துவம் என்றார்.

மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பல முறை மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதையும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

Also Read : முகத்தை உடைத்துவிடுவேன்... மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்து மிரட்டிய நடத்துநர் பணியிடை நீக்கம்

top videos

    மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்போது, இட ஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாக இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். சீக்கிய, பவுத்த மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கொண்டு வரப்பட்ட திருத்தத்தையே, கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களும் கேட்கிறார்கள் என்று முதலமைச்சர் கூறினார்.

    First published:

    Tags: CM MK Stalin, TN Assembly