முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்காததற்கு காரணம் இதுதான்... செங்கோட்டையன் விளக்கம்

எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்காததற்கு காரணம் இதுதான்... செங்கோட்டையன் விளக்கம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Erode, India

அ.தி.மு.க, பா.ஜ.க இடையே முரண்பாடுகள் இல்லை என்றும் நேரச் சூழல் காரணமாக பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க ஈரோடு மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ‘கிழக்கு தொகுதியும் மேற்கு தொகுதியும் சேர்ந்து 1.50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்றும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் திருப்பு முனையாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்துள்ளது.

அதேபோல சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவை தமிழ் மண்ணில் இருந்து அசைக்க முடியாது. ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார். 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வரலாற்றில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது இது தான் முதன் முறை என்றார். அ.தி.மு.க, பா.ஜ.க இடையே முரண்பாடுகள் இல்லை என்ற செங்கோட்டையன், நேர சூழல் காரணமாக பிரதமர்- ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை என்றார்.

First published:

Tags: Edappadi Palaniswami, Modi