முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ’அண்ணன்’ செல்லூர் ராஜு புலிவாலை பிடிச்சிருக்காரு..!” - அமைச்சர் தங்கம் தென்னரசு கலகல பேச்சு..

“மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ’அண்ணன்’ செல்லூர் ராஜு புலிவாலை பிடிச்சிருக்காரு..!” - அமைச்சர் தங்கம் தென்னரசு கலகல பேச்சு..

செல்லூர் ராஜு குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு

செல்லூர் ராஜு குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக

  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் எனவும், தொழிற்பேட்டை தொடங்குங்கள், மதுரை மக்கள் ஆஹா.. ஓஹோ.. எனப் பாராட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்வீர்களா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார். அப்போது மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றதாகவும், மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள் ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்து படம் வெளியிட்டுள்ளார், ஆனால் அவரின் வீரம் புலியின் வாயை பிடிக்காமல் வாலை பிடித்துள்ளதில் தெரிவதாகவும் கூறியதால் அவையில் மீண்டும் சிரிப்பலை ஏற்பட்டது.

மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சர் அறிவித்துள்ளதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மக்களிடத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளதால், மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Madurai, Sellur Raju, Thangam Thennarasu