சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், ‘100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கான சத்திய ஞான சபை ஜோதி தரிசனம் மற்றும் சத்திய தரும சாலை அமைந்துள்ள பகுதியில் தியான மண்டபம், மின்னணுமயமாக்கப்பட்ட நூலகம், பாடசாலை அரங்கம், அருங்காட்சியகம், மூலிகை பூங்கா, தங்குமிடங்கள் மற்றும் உணவகம் கட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 185 திருக்கோவிலுக்கு சொந்தமான 1,123.70 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் திருப்பணி மற்றும் பக்தர்கள் வசதிக்காக அடிப்படை வசதிகள், ராமர் பாதம் திருக்கோயில், கோதண்ட ராமர் திருக்கோயில் திருப்பணி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் ரூபாய் 146 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் அடிப்படை வசதிகளுக்கு வளர்ச்சி பணிகளுக்கு மேற்கொள்வதற்கு 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி, புதியதாக வரிசை மண்டபம், திருமண மண்டபத்துடன் கூடிய அன்னதான கூடம் கட்டும் பணி உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு 170.11 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் ஐயர்மலை அருள்மிகு இரத்தினகிரிசுவரர் திருக்கோயில் மற்றும் சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் விரைவாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக "கம்பிவட ஊர்தி" அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர்பாபுவின் பதிலுரையில், ‘அடித்து விளையாடும் ஆதவனே.. கழகத்தின் காந்தமே.. உயிர் மூச்சின் ஆக்சிஜனே... என்று உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்தார்.
ஓடுகின்ற நீரில்தான் ஆக்சிஜன் அதிகம் இருக்கும் என்பார்கள்.. ஓடி ஓடி உழைக்கும் உதயநிதியின் செயல்பாடு கழகத்தின் உயிர்மூச்சின் ஆக்சிஜன். ரசிகர்கள், தொண்டர்கள் என பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு தமிழகமெங்கும் இளைஞர் பட்டாளத்தை ஈர்த்து வைத்திருக்கும் கழகத்தின் காந்தமே.
வைகுண்டனின் மறுவடிவமே முதலமைச்சர்... என்னை புகழ வேண்டாம் என்று சொல்கிறார் முதல்வர்.
இது அரச கட்டளை. இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளை சொல்ல வேண்டி இருக்கிறது. இது ஆண்டவன் கட்டளை. விக்ரமசோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளட்ட மன்னர் ஆட்சியின் வரிசையில் முதலமைச்சர் பெயர் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம்.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கூடாது- டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu