சி.பா.ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,” புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட ஜனநாயக பொறுப்புள்ள கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்,
மேலும், நாட்டின் பழங்குடி இன மக்களிலிருந்து குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவரை ஏன் விழாவிற்கு அழைக்கவில்லை என்று கேட்டால் வேறு வேறு காரணங்கள் சொல்கிறீர்கள். இது எல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறார்கள். பிரதமரில்லாமல் நாங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்.
இந்தியா என்பது குடியரசு நாடு. இந்தியாவின் முதல் குடிமகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் எப்படி ஜனநாயக நாடாக இருக்கும். இதை எதிர்க்க வேண்டும். ஆகவே, மம்தா பானர்ஜி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதை எதிர்க்கும் போது அதை வரவேற்க வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும் படிக்க... அரசு பேருந்துகளில் கட்டணம் ரத்து... அரசாணை வெளியிட்ட தமிழக அரசு... முழு விவரம்...!
மேலும், “தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School open, Seeman, Tamil Nadu