முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்தாரா இபிஎஸ்? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்தாரா இபிஎஸ்? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு பற்றி அறிக்கைத் தாக்கல் செய்ய சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Salem, India

சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் எடப்பாடி பழனிசாமி சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 30 நாட்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்ததாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மிலானி தானே முன்வந்து நேரில் ஆஜராகி வாதிட்டார்.

top videos

    அதன்பின்னர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி வழக்கில் குற்றப்பத்திரிகையை 30 நாட்களுக்குள் சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பொதுநலன் சார்ந்த இந்த வழக்கை தொடர்ந்த புகார்தாரர் மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும் சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    First published:

    Tags: Edappadi Palaniswami