முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்... கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்... கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

RSS Rally in Tamilnadu | பாடல் பாடவோ கூடாது என்றும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறவுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது. அதன்படி, 45 இடங்களில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், 12 கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:"இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

 

குறிப்பாக ஊர்வலத்தின்போது மற்ற மதங்களைப் பற்றி, சாதிகளைப் பற்றி அவதூறாக பேசுவதோ அல்லது பாடல் பாடவோ கூடாது என்றும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. ஊர்வலத்தைத் தொடர்ந்து, பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: RSS, Tamilnadu