முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000... நாளை பட்ஜெட்டில் வருகிறது முக்கிய அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000... நாளை பட்ஜெட்டில் வருகிறது முக்கிய அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000

தமிழ்நாட்டில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் சில முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார்.  இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கும் திட்டம்தான்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.  திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இதனிடையே, ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில்  பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி வரும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.  நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Also Read : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது... தீர்ப்பு தேதியை அறிவித்த உயர்நீதிமன்றம்..!

மேலும் இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறலாம்.

மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினருக்கான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, Ration card, TN Budget 2023