முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 கோடி சொத்து... கே.பி.அன்பழகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 கோடி சொத்து... கே.பி.அன்பழகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

கே.பி.அன்பழகன்

கே.பி.அன்பழகன்

திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும்

  • Last Updated :
  • Dharmapuri, India

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் மகன்கள் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

மேலும் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில், கே.பி.அன்பழகன், அவரது உறவினர்களான ரவிசங்கர், சரவணன் உள்ளிட்டோர் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடு என சொத்துக்களாகவும்,முறைகேடாக பெற்ற பணத்தை கே.பி அன்பழகனுக்கு சொந்தமான சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வழியாகவும் மொத்தம் 45 கோடியே 20 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.

இதையும் படிங்க; திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்கள்...!

இந்த வழக்கில் புலன்விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, தருமபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.பி அன்பழகன், அவரது மனைவி, மகன்கள், சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

top videos

    அவர்கள் அனைவரது மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும்.

    First published:

    Tags: AIADMK