திமுக அரசு அமைந்த பிறகு இரண்டாம் முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை எந்த அமைச்சரும் நீக்கப்படாத நிலையில், முதல் முறையாக ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாசர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்ட மேடையில் ஏறாமல், அப்படியே காரில் வேகமாக கிளம்பி சென்றார். அதனை தொடர்ந்து நடந்த இரண்டு கூட்டங்களில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு வாடிய முகத்துடன் கிளம்பி சென்றார்.
இதையும் படிங்க; LIVE AUTO REFRESH ON Tamil Live Breaking News : கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சொல்வது என்ன?
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சிக்காரர் நாற்காலி எடுத்து வர தாமதமானதால், அவரை அடிக்க கல்லைக் கொண்டு ஓங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மகனின் தனி ஆவர்த்தனமும், நிர்வாக காரணங்களும் சேர்ந்து ஆவடி நாசரின் அமைச்சர் பதவியை காலி செய்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Cabinet