முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் சென்னை உள்பட 14 இடங்களில் சதம் அடித்த வெயில்...!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 14 இடங்களில் சதம் அடித்த வெயில்...!

வெப்பம்

வெப்பம்

தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu |

கோடை வெயிலின் தாக்கம் , தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கரூர் பரமத்தியில், புதன்கிழமை 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 105 டிகிரியும், வேலூரில் 104 டிகிரியும், சேலத்தில் 103 டிகிரியும் வெப்பநிலை பதிவாகினது. சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருவண்ணாமலையில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

இதையும் வாசிக்க: கோடைக்காலம் வருது.. டாஸ்மாக்கில் பீர் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்... எழுந்த கோரிக்கை..!

top videos

    இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை நண்பகல் 12 மணிக்கு மேல் வேலையில் ஈடுபடுத்த வேண்டாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கோடைக்காலம் முடியும் வரை மழலையர் பள்ளிகளை செயல்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிய நேரத்தில் வெளியே செல்ல நேரிட்டால், குடை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    First published:

    Tags: Chennai, Heat Wave, Karur