முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெயில் உக்கிரமாக சுட்டெரிக்க என்ன காரணம்... இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? - வானிலை இயக்குநர் விளக்கம்!

வெயில் உக்கிரமாக சுட்டெரிக்க என்ன காரணம்... இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? - வானிலை இயக்குநர் விளக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிப்பது ஏன் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மோக்கா புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது கடல் காற்று தாமதமாக வீசுவது, ஈரப்பதமான மழை மேக கூட்டங்கள் இல்லாதது மேற்கில் இருந்து வீசும் வறண்ட காற்று போன்ற சூழலால் வெயிலின் தீவிரம் அதிகம் உணரப்படுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது.  கடந்த 2003-ஆம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, கடந்த 2014ஆம் ஆண்டு 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் ஒன்றரை லட்சம் புதிய பதவிகள்! - நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஈபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

 இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏன் வெயில் அதிகரித்துள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் கரையைகடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ம் தேதியன்று கடல் காற்று பிற்பகல் 12.45-க்கு மணிக்குத்தான் வீசத்தொடங்கியது. 16-ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்படுகிறது. இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும் கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என தெரிவித்தார்.

top videos

    மேலும் வரும் நாட்களில் மாநிலத்தின் சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு அளவில் இருந்து 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Balachandran, Summer, Tamilnadu