முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈபிஎஸ் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது ஏன்..? வெளியான புதிய தகவல்..!

ஈபிஎஸ் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது ஏன்..? வெளியான புதிய தகவல்..!

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கு

ஈபிஎஸ் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை செய்ததற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடநாடு வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த டிஎஸ்பி கனகராஜிடம், சென்னையில் உள்ள இல்லத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைக்குக் காரணம் என்ன என்பது தொடர்பாக பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ், தனது செல்போனில் பேசிய நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : காவலர்களுக்கு சீருடைப் படி ரூ.4,500 ஆக உயர்வு... வார விடுமுறை... முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இதில், ஜெயலலிதாவின் ஓட்டுநர் செல்போனில் டிஎஸ்பி கனகராஜின் செல்போன் எண் இருந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே டிஎஸ்பி கனகராஜிடம் விசாரணை நடத்தினர். இதேபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்கள் சிலரிடமும் கனகராஜ் செல்போனில் பேசியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Crime News, EPS, Jayalalithaa