முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “ரேசன் கடைகளில் இத மட்டும்தான் விற்கணும்” - கூட்டுறவு செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்..!

“ரேசன் கடைகளில் இத மட்டும்தான் விற்கணும்” - கூட்டுறவு செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்..!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிய ஜவுளி பிரிவினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

top videos

    மேலும், நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    First published:

    Tags: Radhakrishnan, Ration Goods, Ration Shop